2026.03.12 அன்று, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் மருதங்கேணி பிரிவிற்குட்பட்ட குஞ்சங்கல் கிராமத்தில் வாழும் சுமார் 70 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு, கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த திட்டம் Christy Jesudason அவர்களின் ஒருங்கிணைப்பில், Ganapathipillai Suthakaran அவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திட்டத்திற்கு பங்களிப்பு செய்த கணபதிப்பிள்ளை சுதாகரன் அவர்களையும் அவரது மனைவியையும் கிராம மக்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் கிராம தலைவர் Nallathambi Velayutham, Keerthana Christy, குஞ்சங்கல் கிராம அலுவலர் K. Dilakshan, மருதங்கேணி குள சமுதாய வலுவூட்டல் மூலோபாய நிபுணர் Sundaramurthy, கிராம சங்க உறுப்பினர் K. Mahendran, Star Snekam Sports Club உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கிராம மக்களின் கோரிக்கையாக, அந்தப் பகுதியில் சிறியளவிலான தொழிற்பேட்டை ஒன்றை நிறுவுமாறும் அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
